நீலகிரி எல்லை பகுதியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி எல்லை பகுதியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
X

எல்லையோர கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியின மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் கூட்டம்.

இதில் அனைத்து துறைகளை சார்ந்த அதிகாரிகள், போலீசார் கலந்துகொண்டு பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

நீலகிரி மாவட்ட எல்லையோர கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியின மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

மஞ்சூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிண்ணக்கொரை, கொலக்கம்பை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆனைப்பள்ளம், கோத்தகிரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மெட்டுக்கல், கம்பையூர், பாவியூர், கோழிகுட்டை, மசினகுடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆனைகட்டி, நியூ கோப் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாரதி நகர், அய்யப்பன்மட்டம், செல்வபுரம், தேவாலா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கூடமூலா மற்றும் 10 நம்பர் பனியர் காலனி ஆகிய கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்பட்டது.

இதில் அனைத்து துறைகளை சார்ந்த அதிகாரிகள், போலீசார் கலந்து கொண்டு பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 235 மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் 418 பழங்குடியின மக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!