குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் பூத்துள்ள ஜகரண்டா மலர்
நீலகிரி மாவட்டம் மலைப்பகுதிகளில் நெடுஞ்சாலையில் கண்களுக்கு விருந்து அளித்தது சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் மலர்ந்துள்ள ஜகரண்டா மலர்கள்.
உலக சுற்றுலாவில் நீங்கா இடம் பிடித்த மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள், சுற்றுலா ஸ்தலங்கள் அதிக அளவில் உள்ளன. இதில் பூங்காக்கள், நீர்வீழ்ச்சிகள், சரணாலயங்கள் போலவே மலைப்பாதைக்கும் ஓர் அழகு உண்டு. தற்போது கோடை காலம் நெருங்கிய நிலையில் குன்னூர், கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஜகரண்டா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
இந்நிலையில், பனிக்காலம் முடிந்து தற்போது கோடைக்காலம் நெருங்கிய நிலையில் இதமான காலநிலை நிலவி வருவதால் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை ஜகரண்டா மலர்கள் பூத்துக்குலுங்கும். ஜகரண்டா மலர்கள் பூக்கும் மரங்கள் நிழல் தரும் மரமாகவும், தேயிலை தோட்டங்களை அழகு படுத்தும் வேலியாகவும் 1800 களில் ஆங்கிலேயர் காலத்தில் சுவிட்சர்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டு நடவு செய்யப்பட்டு இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த மரங்கள் ஆண்டுக்கு ஒரு முறை மலர்கள் பூத்து, மரத்தில் உள்ள இலைகள் உதிர்ந்து மலர்கள் மட்டும் ஊதா நிறத்தில் காட்சி அளித்து பூத்துக்குலுங்கும்.தற்போது கோத்தகிரி, குன்னூர், மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலையோரத்தில் ஜகரண்டா மலர்கள் பூத்து உள்ளன. இதை மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் படம் பிடித்து, செல்ஃபி புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் ஜகரண்டா மலர் தற்போது சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக கவர்ந்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu