நீலகிரியில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை அறிவிப்பு

நீலகிரியில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை அறிவிப்பு
X

பைல் படம்.

ஆவணங்களை காண்பித்து உரியவர்கள் பணத்தை திரும்ப பெற்று செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் 294 இடங்களுக்கு நடக்கிறது. 15 உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை செய்து, ஆவணம் இல்லாமல் எடுத்து செல்லப்படும் ரூ.50 ஆயிரத்துக்கு மேலான பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். நீலகிரியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை ரூ.16,32,150 பறிமுதல் செய்யப்பட்டது. அதற்கான ஆவணங்களை காண்பித்து உரியவர்கள் பணத்தை திரும்ப பெற்று செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா