நீலகிரி அ.தி.மு.கவில் கோஷ்டி மோதல்

நீலகிரி அ.தி.மு.கவில்  கோஷ்டி மோதல்
X
கோத்தகிரியில் MGR சிலைக்கு மாலை அணிவித்த போது அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது.

குன்னூர் அ.தி.மு.க.வில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது கட்சிக்குள் சசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய குன்னூர் எம்.எல்.ஏ. சாந்தி ராமு, தற்போதைய அதிமுக குன்னூர் வேட்பாளர் கப்பச்சி வினோத் ஆதரவாளர்கள் எம்ஜிஆர் சிலை முன்பு தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்றத் தொகுதியில் தற்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏ. சாந்தி ராமுக்கு மீண்டும் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு வழங்காமல் அதிமுக மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத்துக்கு குன்னூர் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க தலைமை வாய்ப்பு வழங்கியது.

இதனிடையே கோத்தகிரி எம்ஜிஆர் சிலை முன்பு அ.தி.மு.க வேட்பாளர் கப்பச்சி வினோத் தனது பிரச்சாரத்தை துவங்க வந்தபோது, தற்போதைய அ.தி.மு.க குன்னூர் எம்.எல்.ஏ. சாந்தி ராமு ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எம்ஜிஆர் சிலை முன்பு குன்னூர் எம்.எல்.ஏ. சாந்தி ராமுவை, குன்னூர் அதிமுக வேட்பாளர் கப்பச்சி வினோத் ஆதரவாளர்கள் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சாரம் துவங்கிய முதல் நாளே அதிமுகவினரிடையே கோஷ்டி பூசல் தொடங்கியுள்ள சம்பவம் கோத்தகிரியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Tags

Next Story