மலைராணிக்கு புது மகுடம் : வந்தது நவீன ரயில்..!

மலைராணிக்கு புது மகுடம் :  வந்தது நவீன ரயில்..!
X
யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயிலின் நவீன பெட்டிகள் குன்னூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

சென்னையிலிருந்து நவீன முறையில் புதிதாக தயாரிக்கப்பட்ட மலை ரயில் பெட்டிகள் குன்னூருக்கு வந்தடைந்தது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1908–ம் ஆண்டு முதல் ஊட்டி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரயில்வே துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னை ரயில்வே பணிமனையில் புதிதாக தயாரிக்கப்பட்ட 4 பெட்டிகள் மேட்டுப்பாளையம் வந்தடைந்தது.



அதனை மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு சோதனை ஓட்டம் விடப்பட்டது.

இதில் 158 இருக்கைகள் இடம் பெற்றிருந்தன. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான மலை ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் இன்ஜினியர்களும் பெட்டிகளை பரிசோதனை செய்தனர்.

இதில் குன்னூர் - உதகை வரையிலான சோதனை ஓட்டம் முழுவதுமாக வெற்றியடைந்த நிலையில் வருகிற ஏப்ரல் மாதம் முதல் கோடை சீசனில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த மலை ரயில் சேவை மேட்டுப்பாளையம் - உதகை இடையே இயக்குவதற்கு ரயில்வே துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil