குன்னூர்: மாதவிடாய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
குன்னூரில், பழங்குடியின இளம்பெண்களுக்கு மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் புதுக்காடு, குரும்பாடி, கோழிக்கரை, ஆணைபள்ளம், சேம்பக்கரை, பம்பலகொம்பை போன்ற பல்வேறு பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் இளம்பெண்களுக்கு, மாதவிடாய் பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்த நிலையில் இவர்களுக்கான விழிப்புணர்வுகளை ஆர்ச்செடின் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மலைவாழ் மகளிர் மேம்பாட்டு சங்கம் மற்றும் சேனிடேசன் ஃபர்ஸ்ட் என்னும் தனியார் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்டது.
இதில், 182 இளம் பெண்களுக்கு சுகாதார பெட்டகங்கள் வழங்கப்பட்டன. மேலும் பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பற்றி புஷ்பா மருத்துவமனையின் மருத்துவர் சுஜாதா இளம்பெண்களுக்கு விளக்கமளித்தார். பத்மபிரியா, நிஷா, கண்ணம்மா, ராணி, திரிபுவனம், ராகினி உட்பட்ட மகளிர் சுய உதவி குழு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu