கோத்தகிரியில் நடைபெற்ற தேசிய நூலக வார விழா

கோத்தகிரியில் நடைபெற்ற தேசிய நூலக வார விழா
X

பரிசு பெற்ற மாணவர்கள்.

விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோத்தகிரி கிளை நூலகம் மூலம் நவம்பர் 14 முதல் 20 ம் தேதி வரை கோத்தகிரி கிளை நூலகம் மூலம் மக்கள் செய்தி தொடர்பு துறை அதிகாரி கௌரி வரதராஜன் முன்னிலையில் புத்தக கண்காட்சி, குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து குழந்தைகள் தின விழா கொண்டாடுதல், மதிய உணவு வழங்குதல், புரவலர் மற்றும் பெரும் புரவலர் சேர்க்கை, நூலக உறுப்பினர்கள் சேர்க்கை, இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டி நடத்தப்பட்டது.

நிறைவு விழா நிகழ்ச்சியில் இன்று வாசகர் வட்டம் தலைவர் போஜன் தலைமையில் நடைபெற்றது. பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார். முருகன் அறிக்கை வாசித்தார். தேசிய நூலக வார விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த பள்ளி மாணவர்களுக்கு நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பொன்தோஷ் பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ரவிக்குமார் ஹில்போர்ட் பள்ளி தாளாளர், யாஜி பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் குண்டாடா, கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவர் ராம்குமார், கீழ்கோத்தகிரி ஒன்றிய செயலாளர் எஸ். ஆர். ராஜேந்திரன், கணேசன், முருகன், ஆசிரியர்கள் சத்யா, சைனி மேத்யூ, நஞ்சுண்டன் மற்றும் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!