நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பெண்களுக்கு நாரி சக்தி விருது

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பெண்களுக்கு நாரி சக்தி விருது
X

சர்வதேச மகளிர் தினத்தன்று டெல்லியில் நடந்த விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கோத்தகிரி அருகே பெட்டுமந்து கிராமத்தை சேர்ந்த தேஜம்மாள், ஜெயாமுத்துவுக்கு விருது வழங்கினார்.

நீலகிரி பழங்குடியின பெண்களுக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்

இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு, நாரி சக்தி விருது வழங்கும் விழா புதுடெல்லியில் நடைபெற்றது. சர்வதேச மகளிர் தினத்தன்று நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பெட்டுமந்து கிராமத்தை சேர்ந்த தேஜம்மாள், ஜெயாமுத்து ஆகிய 2 பேருக்கு விருது வழங்கினார்.

அவர்கள், தோடர் எம்பிராய்டரி துணி வகைகளை உற்பத்தி செய்து தங்களது பொருளாதார மேம்பாட்டுக்காக சிறப்பாக பணிபுரிந்து வருவதால் விருது வழங்கப்பட்டது. தோடர் எம்பிராய்டரிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. நீலகிரி பழங்குடியின பெண்களுக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கடந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று தோடர் எம்பிராய்டரி குறித்து பிரதமர் டுவிட்டரில் கருத்து தெரிவித்தார். நடப்பாண்டில் எங்களை புதுடெல்லிக்கு அழைத்து விருது வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று விருது பெற்றவர்கள் கூறினர்.

Tags

Next Story
ai solutions for small business