குன்னூர் மேட்டுபாளையம் இடையே மலை ரயில் சோதனை ஓட்டம்

நீலகிரி மலைரெயிலுக்கு சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட சொகுசு பெட்டிகளை பொருத்தி குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடைப்பெற்றது..
நீலகிரி மாவட்டத்தில் இயங்கிவரும் மலைரெயில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி எஞ்சின் மூலமாக குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே இயங்கி வருகிறது. இந்த வருடம் ஏப்ரல் மே மாதங்களில் நீலகிரி மாவட்ட கோடைவிழாவை கண்டு ரசிக்க வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க தெற்கு ரெயில்வே பல்வேறு வகையில் சிறப்பு அம்சங்கள் புகுத்தி வருகின்றது.
இந்த நிலையில் இந்த வருடம் மலைரெயிலில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மலை ரெயிலுக்கான முற்றிலும் புதிய வடிவில் சென்னை (ICF) இந்தியன் கோச் பாக்டரி இல் இருந்து சில தினங்களுக்கு முன்பு 27 பெட்டிகள் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்து கொரோனா தொற்று காரணமாக கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் பயணிகள் யாருக்கும் அனுமதி வழங்காமல் நீராவி எஞ்சினுடன் 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை மீண்டும் குன்னூரில் இருந்து மேட்டுபாளையம் வரை வெள்ளோட்டமாக இயக்கப்பட்டது ..
இந்த மலைரெயில் சிறப்பு அம்சமாக ஒவ்வொரு பெட்டிக்கும் முன் பகுதியில் பிரேக்மேன் அமர்ந்து பிரேக்கை இயக்குவதற்காக தனி அறை அமைக்கப்பட்டுள்ளது மேலும் சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து வர பெரிய அளவிலான ஜன்னல் கண்ணாடியுடன் கூடிய பாது காப்பாக ஜன்னல் அமைக்கப்பட்டுள்ளது வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடைப் பெற்றதை தொடர்ந்து கொரானா தொற்று நீங்கி ரெயில்கள் இயக்கப்படும்போது இந்த பெட்டிகளை இணைத்து இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர் ..
நாடே ஊரடங்கில் உள்ள நிலையில் குன்னூரில் மலை ரெயில் இயங்கியது கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டனர் பிறகு வெள்ளோட்டம் என கேள்வி பட்டு நிம்மதியடைந்தனர்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu