குன்னூரில் மலை ரயில் சேவை சோதனை ஓட்டம்

குன்னூரில் மலை ரயில் சேவை சோதனை ஓட்டம்
X

மலை ரயில்.

மண் சரிவு ஏற்பட்டு, நிறுத்தப்பட்ட மலை ரயில் வரும் 22ஆம் தேதி முதல் இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் .

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் நவம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் மலைரயில் பாதையில் பாறைகள் மற்றும் மண் கல் விழுந்தது. இதனால் மலை ரயில் சேவை ஆறாம் தேதியிலிருந்து முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது நான்கு இடங்களிலும் ரயில்வே ஊழியர்கள் சீர்செய்து தயார் நிலையில் வைத்திருந்தனர். பின்பு தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்ததால் மலை ரயிலை இயக்க சிக்கல் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் மீண்டும் வரும் டிசம்பர் 22ஆம் தேதி இருந்து மலை ரயிலை இயக்க ரயில்வே துறையினர் முடிவு செய்து, இன்று குன்னூரில் இருந்து ஒரு பெட்டியுடன் வெல்லோட்டம் விடப்பட்டது. எனவே வரும் 22 ஆம் தேதியிலிருந்து மலை ரயில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!