குண்டும் குழியுமான குன்னூர் சாலை; தானாக முன்வந்து சீரமைத்த போலீசார்

குண்டும் குழியுமான குன்னூர் சாலை; தானாக முன்வந்து சீரமைத்த போலீசார்
X

தானாக முன்வந்து சாலைகளை சீரமைக்கும் காவல்துறையினர்.

குண்டும் குழியுமான குன்னூர் சாலயை 10க்கும் மேற்பட்ட காவலர்கள் தானாக முன்வந்து சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

குன்னூரில் குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைப்பதற்கு நகராட்சியினர் அலட்சியம் காட்டி வந்த நிலையில் காவல்துறையினர் முன்வந்து இதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் டென்ட்ஹில் செல்லும் சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நகராட்சியினர் சீரமைப்பதற்கு அலட்சியம் காட்டி வருகின்றனர்.

மேலும் அந்த சாலை வழியாக மருத்துவமனை, முதியோர் இல்லம், பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள், திருமண மண்டபம் போன்ற தேவைகளுக்கு செல்வோர் அந்த சாலையை பயன்படுத்தி வரும் நிலையில் குண்டு குழியுமாக காணப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.

இந்நிலையில், குன்னூர் காவல்துறையினரின் முயற்சியால் 10 மேற்பட்ட காவலர்கள் தானாக முன்வந்து அந்த சாலையை ஜல்லி மற்றும் சிமென்ட் போன்ற கலவைகளை வைத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினரின் இந்த செயல் ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business