/* */

நீலகிரியில் மெகா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த வனத்துறை அமைச்சர்

கேரளாவில் நிபா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் எல்லையோர கிராமங்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நீலகிரியில் மெகா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த வனத்துறை அமைச்சர்
X

குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் முதன்முறையாக பழங்குடியின மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற பெருமையை நீலகிரி மாவட்டம் பெற்றுள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 93% நபர்களுக்கு முதல் தடுப்பு ஊசி செலுத்தி முடிக்கப்பட்ட நிலையில் இன்று நடைபெறும் சிறப்பு முகாம் மூலம் 100% முதல் தடுப்பு ஊசி செலுத்திய மாவட்டமாக நீலகிரி மாவட்டம் அறிவிக்கப்பட உள்ளது. குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி கிராமத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் 295 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.சுமார் 1180 கள பணியாளர்கள் இந்த தடுப்பூசி முகாமில் பணியாற்றி வருகின்றனர்.

முகாமை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் கொரோனா அதிகரித்துச் செல்லும் நிலையில், கேரளாவில் நிபா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால், ,கேரளா எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் எல்லையோர கிராமங்களில் சிறப்பு முகாம் மூலம் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக. கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முழு கண்காணிப்புக்கு பிறகு நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்க படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த சிறப்பு முகாமில் நீலகிரி நோடல் அலுவலர் முனைவர் சங்கர், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, துணை இயக்குநர் (சுகாதார பணிகள் ) மரு,பாலுசாமி உட்பட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Sep 2021 9:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  4. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  6. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  7. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  9. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!