குன்னூரில் கொரோனா பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
கொரோனா தடுப்பு பணிக்கள் குறித்து, குன்னூர் இன்கோசர்வ் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் இன்கோசர்வ் அலுவலகத்தில், கொரோனா தடுப்பு பணிக்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. , மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ முதன்மைச் செயலர், சுற்றுப்புறச்சூழல், வனம் மற்றும் தலைமைச்செயல் அலுவலர் இன்கோசர்வ் சுப்ரியா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ முதன்மைச் செயலர்,சுற்றுப்புறச்சூழல், வனம் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் இன்கோசர்வ் தெரிவித்ததாவது:
தமிழக அரசின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தலின்படி, கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள் நீலகிரி மாவட்டத்தில் முழுவீச்சில் மேற்கொள்ளவேண்டும். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்புபணிகள் மற்றும் நோய்த்தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் முழுமையாக பின்பற்றுவதை அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற நோய் தடுப்பு வழிமுறைகள் குறித்து அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
இரண்டாம் தவணைதடுப்பூசி செலுத்த உள்ள நபர்களும், தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்த வேண்டும். நமது மாவட்டம் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக மாற்றிட அனைத்து அலுவலர்களும் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, குன்னூர் சார்ஆட்சியர் (பொ) டாக்டர் மோனிகா ரானா, இணை இயக்குநர் (மருத்துவ நல பணிகள்) டாக்டர் பழனிசாமி, உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மனோகரி, வட்டார மருத்துவ அலுவலர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu