கோத்தகிரி பகுதிகளில் காட்டெருமைகள் கூட்டம்; குடியிருப்புவாசிகள் அச்சம்

கோத்தகிரி பகுதிகளில் காட்டெருமைகள் கூட்டம்; குடியிருப்புவாசிகள் அச்சம்
X

கோத்தகிரி தேயிலை தோட்டத்தில் வலம்வரும் காட்டெருமைகள்

கோத்தகிரி பகுதிகளிலுள்ள தேயிலை தோட்டங்களில் 20 க்கும் மேற்பட்ட காட்டெருமை கூட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேயிலை விவசாயம் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபகாலமாக தேயிலைத் தோட்டங்களில் காட்டெருமைகள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் தோட்டத் தொழிலாளர்கள், குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கோத்தகிரி இட்டக்கல் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட காட்டெருமை கூட்டம் சர்வசாதாரணமாக குடியிருப்பை ஒட்டி உள்ள தேயிலைத் தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தது.

இதனால் குடியிருப்புவாசிகளும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் அச்சமடைந்தனர். பகல் நேரங்களில் உலாவரும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!