குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மருத்துவ முகாம்
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த நஞ்சப்ப சத்திரம் பகுதியில், இராணுவம் சார்பில் அப்பகுதி பொதுமக்களுக்கு, மருத்துவ முகாம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில், கடந்த 8ந் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது. அதில் பயணம் செய்த முப்படைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர். அச்சமயத்தில் மீட்புபணியில் உடனிருந்த அப்பகுதி மக்களுக்கு மெட்ராஸ் ரிஜிமென்டல் மையத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இன்று, மெட்ராஸ் ரிஜிமென்டல் மையத்தின் சார்பில் மருத்துவ முகாமினை வெலிங்டன் ராணுவ மையத்தின் காமண்டென்ட் இராஜேஸ்வர்சிங் துவக்கி வைத்தார். அப்பகுதி மக்களின் உடல்நிலை பரிசோதனை, சாக்கரைநோய், ரத்த கொதிப்பு, உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
மேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு, எம்.ஆர்.சி. ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கேப்டன் சரவணக்குமார், மேஜர் வித்யா, வண்டிச்சோலை பஞ்சாயத்து தலைவர் மஞ்சுளா சதிஷ்குமார் (அதிமுக) உட்பட அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu