குன்னூரில் மதுபாட்டில்கள் திருட்டு: போலீசார் விசாரணை

குன்னூரில் மதுபாட்டில்கள் திருட்டு: போலீசார் விசாரணை
X

டாஸ்மாக்கில் மர்ம நபர்களால் திருடப்பட்ட மதுபாட்டில்கள். 

டாஸ்மார்க் கடையை துளையிட்டு 18 மதுபாட்டில்களை திருடிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட்ரோடு பிரதான சாலையில் அரசு டாஸ்மார்க் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில் கடையின் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் மேல் தளத்தை துளையிட்டு 18 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி சென்றனர். கடையின் பணியாளர்கள் காலையில் வந்து கடையை திறந்து பார்த்தபோது மது பாட்டில்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து குன்னூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை thodarnthuபின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாள்தோறும் பரபரப்பாக காணப்படும் சாலையில் திருடுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!