/* */

குன்னூரில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை: மக்கள் அச்சம்

குன்னூர் அருகே கரோலினா எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தையால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

HIGHLIGHTS

குன்னூரில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை: மக்கள் அச்சம்
X

குன்னூரில் குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை வந்து சென்றது, கேமிராவில் பதிவாகி உள்ளது. 

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது .குறிப்பாக காட்டெருமை, கரடி சிறுத்தை போன்ற விலங்குகள் உணவைத்தேடி, குடியிருப்பு பகுதிக்குள் வந்து செல்கின்றன.

குன்னூர் அருகே உள்ள கரோலினா எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகள் அதிகமாக உள்ளது. அங்கிருந்து இரவு நேரங்களில் சிறுத்தை ஒன்று கடந்த சில நாட்களாக வளர்ப்பு நாய் மற்றும் கோழிகளை வேட்டையாடி வந்தது. இந்நிலையில் பொது மக்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா வந்த காட்சி, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது,

இச்சம்பவம், கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இதனால் இரவு நேரங்களில் பணி முடிந்து செல்பவர்கள், அச்சத்துடன் சென்று வருவதாகவும், உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்பு, வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 17 Sep 2021 3:12 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை