குன்னூரில் சிறுத்தை தாக்கி கன்று குட்டி பலி

குன்னூரில் சிறுத்தை தாக்கி கன்று குட்டி பலி
X

சம்பவ இடத்தில் ஆய்வு செய்யும் வனத்துறையினர்.

கிராமப் பகுதியில் உலா வரும் சிறுத்தையை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை.

குன்னூர் பகுதியில் சமீப காலமாக சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் வரும் வன விலங்குகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் குன்னூர் கரோலினா பகுதியில் கன்று இறந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ பகுதிக்கு விரைந்த வந்த வனத்துறையினர் கன்று குட்டியை அடித்துக் கொன்றது சிறுத்தை புலி என உறுதி செய்தனர். பின்பு கன்றுகுட்டி அதே பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai powered agriculture