குன்னூரில் நாயை வேட்டையாடிய சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

குன்னூரில் நாயை வேட்டையாடிய சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்
X

குன்னூரில்,  குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை,  நாயை வேட்டையாடி சென்ற காடி, சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து அடர்வனத்தில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வருகிறது. இந்நிலையில், குன்னூர் வெலிங்டன் நல்லப்பன் தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை அட்டகாசம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இரண்டு முறை குடியிருப்பு பகுதியில் புகுந்து வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்றது.

இதனிடையே, நேற்றிரவு மூன்றாவது முறையாக வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை நாயை வேட்டையாடி சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நாயை சிறுத்தை வேட்டையாடும் காட்சி, அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து, அதை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!