குன்னூரில் மண் சரிவு: அந்தரத்தில் தொங்கிய அரசு மருத்துவமனை

குன்னூரில் மண் சரிவு: அந்தரத்தில் தொங்கிய அரசு மருத்துவமனை
X

அந்தரத்தில் தொங்கும் கட்டிடம்.

குன்னூரில் பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறி மண் அகற்றியதால் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனை அந்தரத்தில் தொங்கியது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி அலுவலகத்தின் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த ஆறு மாத காலமாக மாவட்டத்தின் விதிகளை மீறி பொக்லைன் இயந்திரம் மூலமாக மண் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மண்சரிவு ஏற்பட்ட நிலையில் அந்த பணியில் ஈடுபட்டு வந்த இரண்டு தொழிலாளர்கள் மண்ணில் சிக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையின் ஒரு பகுதியில் இன்று மீண்டும் பலத்த சத்தத்துடன் மண் சரிவு ஏற்பட்ட நிலையில் மின் கம்பங்கள், குடிநீர் குழாய்கள் மற்றும் தடுப்புச் சுவர் முழுவதுமாக சேதமடைந்து சரிந்து விழுந்தது. இதனால் அரசு மருத்துவமனை மற்றும் அப்பகுதி குடியிருப்பு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரியதுறை அதிகாரிகள் சீரமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். விதிமீறி நடந்து வரும் கட்டுமான பணியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!