கோத்தகிரியில் காட்டெருமை தாக்கி மூதாட்டி படுகாயம்

கோத்தகிரியில் காட்டெருமை தாக்கி மூதாட்டி படுகாயம்
X
கோத்தகிரியில், காட்டெருமை தாக்கியதில், மூதாட்டி படுகாயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கேத்தி கோலனி மட்டம் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி, (68). அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த காட்டெருமை ஒன்று, திடீரெனஅவரை தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு மீனாட்சி, படுகாயம் அடைந்தார்.

அவரின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காட்டெருமையை விரட்டினர். அதன்பின் மீனாட்சியை மீட்டு, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, குந்தா வனச்சரகர் சரவணகுமார் தலைமையிலான வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story