குன்னூரில் செயல்பட்டு வந்த தொழிலாளர் ஆணைய அலுவலகம் இடமாற்றம்

குன்னூரில் செயல்பட்டு வந்த தொழிலாளர் ஆணைய அலுவலகம் இடமாற்றம்
X
குன்னூரில் செயல்பட்டு வந்த தொழிலாளர் ஆணையம் அலுவலகம், ஈரோட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் பெட்போர்டு பகுதியில் இயங்கி வந்த நீலகிரி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கான மண்டல தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகம், அரசு உத்தரவுப்படி இடமாற்றம் செய்யப்பட்டு, கடந்த 1-ந் தேதி முதல் ஈரோடு, சென்னிமலை ரோட்டில் அரசினர் தொழிற்பயிற்சி மையம் பின்புறம், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் நிரந்தரமாக செயல்பட்டு வருகிறது.

எனவே, நீலகிரி மாவட்ட மக்கள், இனிவரும் காலங்களில் தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட வேண்டிய பணியாளர் இழப்பீட்டு சட்டம் கீழான வழக்குகளும் மற்றும் இதர தொழிலாளர் நலச் சட்டங்கள் கீழான வழக்குகளும், மேற்காணும் முகவரியில் தாக்கல் செய்யலாம்.

பொதுமக்கள், வழக்கறிஞர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இதர தனியார் வணிக நிறுவனங்கள் மேற்காணும் முகவரியில் செயல்படும் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்தை அணுகி தேவைப்படும் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த தகவலை குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), சதீஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?