கோத்தகிரி மேட்டுபாளையம் சாலையில் விபத்து: பெண் பலி

கோத்தகிரி மேட்டுபாளையம் சாலையில் விபத்து: பெண் பலி
X

பைல் படம்.

கோத்தகிரி பகுதியில் டிப்பர் லாரிகள் அதிவேகத்தில் செல்வதால் விபத்துகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேட்டுப்பாளையம் புளியம்பட்டி பகுதியை சேர்ந்த துரைசாமி (55), அவரது மனைவி ஜானகி(50) ஆகியோர் கோத்தகிரி பகுதிக்கு சுப நிகழ்ச்சிக்கு ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தபோது முள்ளூர் பகுதியில் டிப்பர் லாரி முந்தி செல்ல துரைசாமி ஸ்கூட்டியில் முயற்சி செய்துள்ளார் .

அப்போது எதிர்ப்புறமாக பைக் வந்ததால் நிலை தடுமாறி அவரது மனைவி ஜானகி டிப்பர் லாரியில் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். பின்பு துரைசாமியை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு காவல்துறையினர் ஜானகி உடலை பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தால் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் டிப்பர் லாரியை டிரைவர் கார்த்திக் மற்றும் எதிர்ப்புறமாக வந்த பைக்கில் வந்தவர்கள் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!