கோத்தகிரியில் 60 ஏக்கர் முட்டை கோஸ் அழுகி வீணானது

கோத்தகிரியில் 60 ஏக்கர் முட்டை கோஸ் அழுகி வீணானது
X
கோத்தகிரி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த முட்டைகோஸ்கள் விவசாய நிலத்திலேயே அழுகியதால் அரசு நிவாரணம் தர விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் விளையும் முட்டை கோஸ் அறுவடைகாலம் முடிந்தும் கொரானா காரணமாக சந்தைப் படுத்த முடியாதால் தோட்டத்திலேயே அழுகத் துவங்கியுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு 2 கோடிவரை இழப்பு ஏற்படும் சூழல் நிலவுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோத்தகிரி மற்றும் பட்டகொரை, ஈளடா, கதகட்டி,கைக்காட்டி பகுதிகளில் மட்டும் 60 ஏக்கரில் முட்டைகோஸ் பயிரிட்டுள்ளது.

பொதுவாக முட்டைகோஸ் மூன்றே மாதத்தில் அறுவடை செய்து விற்பனை செய்யப்படுவது வழக்கம்.தற்போது கொரோனா ஊரடங்கால் 4 மாதங்கள் கடந்த நிலையில் முட்டைகோஸ் அறுவடை செய்து விற்பனைக்கு எடுத்து செல்ல போதுமான வரவேற்ப்பு ( டிமாண்ட்) இல்லாதால் முட்டை கோஸ் தோட்டத்திலேயே அழுகத் துவங்கியுள்ளது. பெரும்பாலான விவசாயிகள் உரிய விலை கிடைக்காததால் முட்டைக்கோஸை வெட்டி அதே பகுதியில் வீசி வருவகின்றனர். இதனால் இரண்டு கோடிக்கு மேல் முட்டைகோஸ் பயிரிட்டு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
how to bring ai in agriculture