கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை
குன்னுர் நடுவர் நீதிமன்றம்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் பத்து நாள் விசாரணை முடிந்த நிலையில் குன்னூரில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். மேலும் போலீஸ் தரப்பில் கூடுதலாக விசாரணை நடத்த அனுமதி கேட்ட நிலையில் ஒருநாள் கூடுதல் விசாரணைக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் கூடுதல் விசாரணை ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை, கொள்ளை வழக்கிற்கு மூலகாரணமாக இருந்த கார் ஓட்டுநர் கனகராஜ் சேலத்தில் விபத்தில் உயிரிழந்தார்.
இந்த வழக்கையும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினரான ரமேஷ் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோடநாடு கொள்ளை சதி திட்டம் குறித்து தனபாலுக்கு தெரிந்திருந்த நிலையில் போலிஸ் விசாரணையின் போது தெரிவிக்காமல் மறைத்தது, கனகராஜின் செல்போன் பதிவுகளை அழித்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ், தனபால் மற்றும் உறவினர் ரமேஷை கடந்த 25 -ந்தேதி தனி படை போலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க உதகை மாவட்ட அமர்வு நீதி மன்றம் அனுமதி வழங்கியது. இருவரும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
தனபாலிடம் பத்து நாள் விசாரணை முடிந்த நிலையில் குன்னூரில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். மேலும் போலீஸ் தரப்பில் கூடுதலாக விசாரணை நடத்த அனுமதி கேட்ட நிலையில் நீதிபதி ஒருநாள் கூடுதல் விசாரணைக்கு அனுமதி அளித்து குன்னூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து தனபாலை பாதுகாப்பாக விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu