தொடர்மழையால் மகசூல் அதிகரிப்பு; ரூ. 14.66 கோடிக்கு தேயிலை விற்பனை

தொடர்மழையால் மகசூல் அதிகரிப்பு; ரூ. 14.66 கோடிக்கு தேயிலை விற்பனை
X

குன்னுாரில் ரூ.14.66 கோடிக்கு தேயிலை வர்த்தகம் நடந்தது. 

நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை ஏல மையத்தில் ரூ.14.66 கோடிக்கு தேயிலை வர்த்தகம் நடந்தது.

தேயிலை ஏல மையத்தில் நடந்த 35வது தேயிலை ஏலத்தில், 14.46 லட்சம் கிலோ இலை ரகம், 4.70 லட்சம் கிலோ 'டஸ்ட்' ரகம் என, மொத்தம், 19.16 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்துக்கு வந்தது.

ஏலத்தில், 10.82 லட்சம் கிலோ இலை ரகமும், 4.30 லட்சம் கிலோ டஸ்ட் ரகமும் என, 15.12 லட்சம் கிலோ விற்பனையானது; 14.66 கோடி மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலை கிலோ, 96.95 ரூபாயாக இருந்தது. கடந்த ஏலத்தை விட, 4.52 லட்சம் கிலோ வரத்தும், 2.35 லட்சம் கிலோ விற்பனையும் அதிகரித்தது. கிலோவுக்கு ஒரு ரூபாய் ஏற்றம் கண்டது. குறிப்பிட்ட ரக தேயிலை துாள் கிலோவுக்கு, 109 ரூபாய் வரை விற்பனையானது. தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால், பசுந்தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது.

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!