குன்னூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

குன்னூரில் 21 மாற்றுதிறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 750 மாற்றுதிறனாளிகள் உள்ளனர். இவர்களில், மாவட்டத்தில் பல்வேறு தாலுக்காவில் உள்ள மாற்றுதிறனாளிகள், மாவட்ட அலுவலகத்தில் பதிவு செய்யாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், குன்னூர் அரசு மருத்துவமனையில் திறன் உதவியாளர் விஜயன் தலைமையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதில் அவர்களை முழுமையாக பரிசோதித்தபின் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் நகரப்புறம் மற்றும் கிராம பகுதிகளை சேர்ந்த 21 மாற்றுதிறனாளிகள் புதிதாக அடையாள அட்டையை பெற்றுக்கொண்டனர்.

இதில் பல்நோக்கு உதவி மறுவாழ்வு அலுவலர் சண்முக மூர்த்தி, மருத்துவர்கள் நித்யா, தமிழ்ச்செல்வன், ரம்யா, கிருஷ்ணராஜ், கண் பரிசோதகர் மாணிக்கவாசகம் ஆகியோர்கள் கலந்துகொண்டு மாற்றுதிறனாளிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.

Tags

Next Story
கரூர் - ஈரோடு பாதையில் எக்ஸ்பிரஸ், பயணியர் ரயில் சேவை ரத்து: பயணிகள் கவலை..!