படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் திருவிழா: நீலகிரியில் நாளை உள்ளூர் விடுமுறை

நீலகிரியில் படுகர் இன மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஹெத்தையம்மன் திருவிழா
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் திருவிழாவையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் படுகர் இன மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஹெத்தையம்மன் திருவிழா ஆண்டுதோறும் டிச., மாதம் அல்லது ஜன., மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின் போது, மாநில அரசு சார்பில் ஆண்டு தோறும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு, ஹெத்தையம்மன் திருவிழா , 22ம் தேதி (நாளை) கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு பதிலாக ஜன.,8ம் தேதி பணி நாளாகும். இவ்வாறாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறபட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu