ஹெலிகாப்டர் விபத்து: தொடர்ந்து 6-வது நாளாக ஆய்வு

ஹெலிகாப்டர் விபத்து: தொடர்ந்து 6-வது நாளாக ஆய்வு
X

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த ராணுவ அதிகாரிகள்.  

குன்னூர் அருகே காட்டேரி நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் 6 ம் நாளாக ஆய்வு.

குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் கடந்த 8 ம் தேதி கடுமையான மேகமூட்டம் காரணமாக முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் 6-வது நாளாக நஞ்சப்பசத்திரம் பகுதியில் தடயவியல் நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசு கீழ் உள்ள தடயவியல் நிபுணர்கள் குழு மற்றும் அதிகாரிகள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், தொடர்ந்து 6 நாளாக நடைபெறும் விசாரணையில் நஞ்சப்பசத்திரம் பகுதி முழுவதும் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு ஏற்கனவே ராணுவம் மற்றும் விமானப்படை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் ஹெலிக்காப்டரின் பாகங்கள் சேகரிக்கும் பணி நடைப்பெற்று வந்த நிலையில், தற்போது இங்கு நடைபெறும் விசாரணையில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அறிவியல் ஆதாரங்களை சேகரிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

Tags

Next Story
ai marketing future