கனமழை: குன்னூர் லாலி மருத்துவமனை மீது மரம் விழுந்து விபத்து

கனமழை: குன்னூர் லாலி மருத்துவமனை மீது மரம் விழுந்து விபத்து
X

மருத்துவமனை மீது விழுந்த மரக்கிளையை அகற்றும் ஊழியர்கள்.

அரசு மருத்துமனை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. இதனை தொடர்ந்து இரவு முழுவதும் குன்னூர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை குன்னூர் அரசு லாலி மருத்துவமனை மீது மரம் விழுந்தது.

இதனை அறிந்த குன்னூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மருத்துவமனையின் மேற்கூரை மற்றும் கட்டிடம் மீது விழுந்த மரங்களை அகற்றும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

மேலும் மருவத்துமனை வளாகத்தில் காலை வெளிநோயாளிகள் யாரும் வராததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையே அரசு மருத்துமனை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!