குன்னூரில் வெளுத்து வாங்கிய கனமழை

குன்னூரில் வெளுத்து வாங்கிய கனமழை
X

குன்னுரில் பெய்த கனமழையில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தததால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளான காட்டேரி, பாய்ஸ் கம்பெனி, வெலிங்டன், பிளாக் பிரிட்ஜ், சேலாஸ், கேத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. மழையின் காரணமாக ஆறு மற்றும் ஓடைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அத்தியாவசிய பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் மழையினால் சிரமம் அடைந்தனர்.

மேலும் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். கன மழை காரணமாக அணைகள் மற்றும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மலைக்காய்கறி விவசாயிகள் மற்றும் தேயிலை தோட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது மேக மூட்டத்துடன் கடும் குளிர் நிலவி வருகிறது.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?