கோத்தகிரியில் தடுப்புச் சுவரில் மோதி அரசு பேருந்து விபத்து
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஜான்சன் ஸ்கொயர் பகுதியில் அரசு பேருந்து பணி மனை உள்ளது. இங்கு அரசு பேருந்துகளை பழுது பார்த்தல், டீசல் நிரப்பி செல்லுதல், கணக்கு காண்பிக்கப்படுதல் மற்றும் போக்குவரத்து கழக அலுவலகம் சார்ந்த நடவடிக்கைகள் மேற்க்கொள்ள அரசு பேருந்துகள் இந்த பணிமனைக்கு எடுத்து வருவார்கள்.
இந்நிலையில் இன்று மதியம் கோத்தகிரியில் இருந்து கோவைக்கு செல்லும் பேருந்து டீசல் நிரப்புவதற்காக வந்து அரசு பேருந்து பணிமனையில் நின்றிருந்தது. டீசல் நிரப்பப்பட்ட பிறகு பேருந்தை இயக்கத்திலேயே விட்டு விட்டு ஒட்டுநர் ஹேண்ட் ப்ரேக் போட்டு விட்டு அலுவலகம் சென்றுள்ளார். ஓட்டுநர், நடத்துனர் இறங்கி சென்ற நிலையில் அந்த பேருந்து திடீரென ஹேண்ட் ப்ரேக் செயலிழந்து சிறிது தூரம் ஓடி அரசு போக்குவரத்து கழக பணி மனையில் உள்ள ஒரு தடுப்பு சுவரில் இடித்து நின்றது.
இதில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. நல் வாய்ப்பாக அப்பகுதியில் பொது மக்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து அரசு பேருந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றன். ஒட்டுநர் இல்லாமல் அரசு பேருந்து ஓடி தடுப்பு சுவரில் இடித்த சம்பவம் கோத்தகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu