டயர் கடையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

டயர் கடையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
X

குன்னூர் மோர்ஸ்கார்டன் பகுதியில் டயர் கடையில் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.

குன்னூர் அருகேயுள்ள மோர்ஸ்கார்டன் பகுதியில் செயல்பட்டு வரும் டயர் கடைக்குள் சுமார் 4 அடி நீளம் கொண்ட கட்டு விரியன் பாம்பு அடுக்கி வைத்திருந்த டயர்களுக்கு இடையே வெளி வந்தது. இதனை கண்ட கடையின் உரிமையாளரும், வாடிக்கையாளர்களும் ஓட்டம் பிடித்தனர்.இது குறித்து குன்னூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்காக எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!