குன்னூர் தோட்டக்கலை பண்ணையில் யானைகள் உலா- பழங்கள் சேதம்

குன்னூர் தோட்டக்கலை பண்ணையில் யானைகள்  உலா- பழங்கள் சேதம்
X
குன்னூரில், அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையில் புகுந்த யானைக் கூட்டம், அன்னாசி பழங்கள் மற்றும் காய்கறிகளை சேதப்படுத்தின.

நீலகிரி மாவட்டத்தில் ஜுன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பல்வேறு வகையான பழங்களின் சீசன் களைகட்டும். குறிப்பாக பலாப்பழம், பேரிக்காய், பச்சை ஆப்பிள், மங்குஸ்தான் போன்ற பழங்களின் சீசன் துவங்கியுள்ளது. இதனை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து யானைகள் குன்னூருக்கு படையெடுக்கும்.

இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான காட்டேரி பூங்கா தோட்டக்கலை பண்ணையில், தடுப்புகள் மற்றும் மின்வேலிகளை உடைத்து உள்ளே சென்ற காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த அன்னாசி பழங்கள், உருளைகிழங்கு மற்றும் முள்ளங்கி போன்றவற்றை முழுமையாக சேதப்படுத்தின.

மேலும் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் உள்ள விவசாய நிலங்களிலும், குடியிருப்பு பகுதிகளுக்‍கும் உலா வரும் யானை கூட்டங்களை கண்காணிப்பதற்காக, வனத்துறை சார்பாக தனி குழு அமைக்கப்பட்டு, யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டியடிப்பதற்கான பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகின்றன.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil