குன்னூரில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு

குன்னூரில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு
X

குன்னூர் குடியிருப்பில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை, வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைக் கூட்டம் விரட்டி அடிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மலைப்பாதைகள் முழுவதும் பசுமை திரும்பியுள்ளது. தற்போது பலாப்பழ சீசனும் துவங்கியுள்ளது. யானைகளுக்கு பிடித்த உணவுகளான பலாப்பழம், மூங்கில், மற்றும் கோரைபுற்கள் ஆகியவைகள் அதிகமாக உள்ளதால், அவற்றை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் உள்ள காட்டுயானைகள், குன்னூரிற்கு படையெடுத்துள்ளன.

நீண்ட நாட்களாக குடியிருப்பு பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள், குடியிருப்புகள், தடுப்புச்சுவர் நுழைவாயில் கதவுகள் உள்ளிட்டவைகளை உடைத்தெறிந்தன. மேலும் வாழை மரங்கள், பேரிக்காய் மரங்கள் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்தின.

இதனை அடுத்து, குன்னூர் வனத்துறையினர் நீண்ட நாட்களுக்குப் பிறகு, குடியிருப்பு பகுதியில் முகாமிட்டிருந்த யானை கூட்டத்தை, ரன்னிமேடு ரயில் நிலையம் வழியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil