குன்னூரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த குறும்படம் ஒளிபரப்பு

குன்னூரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த குறும்படத்தை ஆர்வமுடன் பார்த்த மக்கள்.
நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் 294 வார்டு உறுப்பினர் இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட குறும்படம் மூலம் இளம் வாக்காளர்கள் மற்றும் வாக்காளர்கள் இடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் குறும்படம் ஒளிபரப்பப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், இன்று குன்னூர் மத்திய பஸ் நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் திரையிடப்பட்டது. இந்த விழிப்புணர்வு குறும்படத்தினை பொதுமக்கள் பார்வையிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து தெரிந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu