கோத்தகிரியில் காய்கறி வாகனத்தில் போதை பொருள் கடத்தல்

கோத்தகிரியில் காய்கறி வாகனத்தில் போதை பொருள் கடத்தல்
X
கோத்தகிரியில், வாழை இலைக் கட்டில் கொண்டுவரப்பட்ட போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோத்தகிரி மார்க்கெட்டுக்கு காய்கறி களை ஏற்றிவரும் வாகனத்தில் புகையிலைப் பொருட்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வேல்முருகன் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார், மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறி ஏற்றி வந்த வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த ஒரு வாகனத்தில், வாழை இலைகளில் ஏராளமான புகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக அந்த வாகனத்தில் இருந்தவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கோத்தகிரி வள்ளுவர் காலனியைச் சேர்ந்த தவராஜா கட்டப்பட்டு பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி, கோவை சிக்கதாசம்பாளையம் பரக்கத்துல்லா ஆகியோர் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்ததுடன் அவர்கள் கடத்தி வந்த ரூ 9,000 மதிப்பிலான புகையிலைகளை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!