கோத்தகிரியில் நாக்கு பெட்டா விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

கோத்தகிரி அருகே தொடங்க வேளாண் வங்கியை கண்டித்து நாக்கு பெட்டா விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு பகுதியில் மகாலிங்க தொடக்க வேளாண் வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்ட வங்கி செயலாளர் மற்றும் ஊழியர்களை இடமாற்றக்கோரி வங்கியின் முன்பு நாக்குபெட்டா விவசாயிகள் சங்கம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கௌரவத் தலைவர், நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் இணைச் செயலாளர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, வங்கி செயலாளரை கண்டித்து உடனடியாக ஊழியர்களை மாற்றக் கோரியும், முறைகேட்டில் ஈடுபட்ட வங்கி செயலாளர், ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிர்வாக குழுவை கலைக்க வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர. ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu