கோத்தகிரியில் அணையை தூர்வார மக்கள் கோரிக்கை

கோத்தகிரியில் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஈளாடா அணையை தூர்வார வேண்டுமென பொதுக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோத்தகிரி நகரத்தை சுற்றி உள்ள ஈளடா, நெடுகுளா,கைக்காட்டி,கோடநாடு,கீழ்க்கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10000 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும்,விவசாயத்திற்கு அதிக அளவு பயன்படக்கூடிய நீர் ஆதாரமாகவும் உள்ளது ஈளடா அணை, தற்போது அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் அதனுடைய முழு கொள்ளளவை எட்டியுள்ளதையடுத்து நீர் வரத்து அதிகரித்துள்ளது.

எனவே கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அணையை தூர் வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மற்றும் அணையை சுற்றியுள்ள பகுதிகளில் மதுபிரியர்கள் மது அருந்திவிட்டு மதுபாட்டில்கள் தடை செய்யப்பட்ட குளிர்பான பாட்டில்களை அணையினுள் வீசி குடிநீர் சுகாதார சீர்க்கேடு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழக அரசு அணையை தூர் வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story