நீலகிரியில் காெராேனா தடுப்பு நடவடிக்கை: சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி

நீலகிரியில் காெராேனா தடுப்பு நடவடிக்கை: சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி
X

சுற்றுலா பயணிகளுக்கு சுகாதார குழுவினர் முகாமிட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

நீலகிரியிலுள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்.

நீலகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு தளர்வை தொடர்ந்து கடந்த மாதம் 23-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டன.

வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பின்னர் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நெகட்டிவ் சான்றிதழ் இன்றி வரலாம் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது நீலகிரியில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நிலையில், வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க சுற்றுலா தலங்களுக்கு வரும் தடுப்பூசி செலுத்தாத சுற்றுலாப் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் செயல்பட தொடங்கி உள்ளது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு சுகாதார குழுவினர் முகாமிட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

முதல் மற்றும் 2-வது டோஸ் செலுத்தாதவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து செலுத்திக் கொள்ளலாம். இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது, சுற்றுலா பயணிகள் மூலம் உள்ளூர் மக்கள், சுற்றுலாத் தலங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil