குன்னூர் நகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி

குன்னூர் நகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி
X

குன்னூரில் நகராட்சி சார்பாக நடைபெற்ற கொரோனா  விழிப்புணர்வு பேரணியில்  தூய்மை பணியாளர்களும், ஆட்டோக்களும் ஊர்வலமாக வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

100-க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட 50 ஆட்டோக்கள் ஊர்வலமாக வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தொற்றை தடுக்கும் விதமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி சார்பில் கொரோனா தொற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலம் ஆணையாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின் கொரோனா தொற்று ஒழிப்பு உறுதிமொழி ஏற்று இந்த பேரணியானது தொடங்கப்பட்டது. மேலும் குன்னூர் அரசு மருத்துவமனை முதல் பேருந்து நிலையம் வரை ஊர்வலம் நடைபெற்றது. இந்த கொரோனா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் கொரோனா தொற்றுக்கு எதிரான வாசகங்களான "முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும்" உட்பட பல்வேறு வாசகங்களை கையில் ஏந்தியபடி 100-க்கும் மேற்பட்ட சுகாதார துறை மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஊர்வலமாக வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்