குன்னூர் அதிமுக வேட்பாளருக்கு தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு

குன்னூர் அதிமுக வேட்பாளருக்கு தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு
X
குன்னூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெற சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கப்பச்சி வினோத் போட்டியிடுகிறார். குன்னூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் அதிமுக வெற்றி பெற பல்வேறு கோவில் மற்றும் தேவாலயங்களில் கட்சி நிர்வாகிகளால் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக குன்னூர் அம்பேத்கர் நகர் பகுதியிலுள்ள தூய வேளாங்கன்னி ஆலயத்தில் குன்னூர் அதிமுக சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் வெற்றி பெற சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. பின்பு அப்பகுதியிலுள்ள மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!