குன்னூரில் மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்

குன்னூரில் மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்
X

பைல் படம்.

நுகர்வோர்கள் தங்கள் மின்சாரம் சம்மந்தப்பட்ட குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் நேரில் தெரிவிக்கலாம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நீலகிரி மின் பகிர்மான வட்டம் சார்பில், மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் 22.10.21 (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தலைமை தாங்குகிறார்.

இதில் குன்னூர் நகரம், சிம்ஸ் பூங்கா, மவுண்ட் ரோடு, மவுண்ட் பிளசண்ட், எடப்பள்ளி, பேரக்ஸ், கிளன்டேல், சேலாஸ், உபதலை, குந்தா, ஆருகுச்சி, எடக்காடு, அதிகரட்டி, கோத்தகிரி நகரம், அரவேனு, வெஸ்ட் புரூக், கட்டபெட்டு, கீழ் கோத்தகிரி, நெடுகுளா ஆகிய பிரிவு அலுவலகத்தை சார்ந்த மின் நுகர்வோர்கள் தங்கள் மின்சாரம் சம்மந்தப்பட்ட குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் நேரில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!