குன்னூரில் குண்டு தயாரிக்கும்போது வெடிபொருள் வெடித்து 3 பேர் படுகாயம்

குன்னூரில் குண்டு தயாரிக்கும்போது வெடிபொருள் வெடித்து 3 பேர் படுகாயம்
X

குன்னூரில் குண்டு தயாரிக்கும்போது வெடித்து காயமடைந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார்.

குன்னூரில் குண்டு தயாரிக்கும்போது வெடித்து படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

நீலகிரி மாவட்டம் குன்னூர் சித்தி விநாயகர் கோயில் தெருவில் வெடி பொருள் வெடித்து கண்ணன்(30),அபு (28),ஸ்ரீ (9) உள்ளிட்ட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

அவுட்காய் போன்ற வெடி பொருளா? அல்லது சக்திவாய்ந்ததா என காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். குன்னூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சித்தி விநாயகர் கோயில் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் பூட்டியிருந்த வீட்டில் கண்ணன்,அபு ஆகிய இருவர் வெடிமருந்துகளை பயன்படுத்தி கம்பிகளைக் கொண்டு குண்டு தயாரித்து கொண்டிருந்தனர். பாதி செய்து கொண்டிருந்த போது எதிர் பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் கண்ணன் மற்றும் அபு அழுகிய இருவரும் படுகாயமடைந்தனர். வீட்டிற்கு வெளியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ என்ற 9வயது சிறுவனும் படுகாயமடைந்தான். மூன்று பேரும் குன்னூர் அரசு லாலி மருததுவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

வெடி பொருட்கள் மீது கம்பிகள் சுற்றப்பட்டுள்ளதால் காவல் துறையினர் இருவரிடம் துருவி,துருவி விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். எதற்க்காக குண்டு தயாரிக்கப்பட்டது என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!