குன்னூரில் அனைத்து வணிகர்கள் சங்கங்களுடனான ஆலோசனை கூட்டம்

குன்னூரில் அனைத்து வணிகர்கள் சங்கங்களுடனான ஆலோசனை கூட்டம்
X

பைல் படம்.

நீலகிரி மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்கங்களுடனான கூட்டம் குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தில் நடைபெற்றது.

குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் சதீஷ்குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தொழிலாளர் நலன் கருதி கடைகள் மற்றும் அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசால் தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் சட்ட திருத்தம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்கங்களுடனான கூட்டம் குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் சட்டத் திருத்தத்தின்படி அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும்.

இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதா என்பது குறித்து தொழிலாளர் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது, இருக்கை வசதி செய்து கொடுக்காமல் இருந்தால் சட்ட விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!