குன்னூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: அமைச்சர் பங்கேற்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் தனியார் அரங்கில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் போஷன் அபியான் திட்டத்தின் அடிப்படையில் 100 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் அங்கன்வாடி பணியாளர்களால் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய உணவுகளை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து, அமைச்சர் தலைமையில் கர்ப்பிணிகள், அங்கன்வாடி பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் ஊட்டச்சத்து உறுதிமொழி ஏற்றனர். விழாவில் பங்கேற்ற 100 கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசின் சார்பில் வனத்துறை அமைச்சர் சீர்வரிசைகளை வழங்கி வாழ்த்தினார்.
தொடர்ந்து, கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த 15 குழந்தைகளுக்கு 49 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், கூடுதல் ஆட்சியர் தீபனா விஸ்வேஸ்வரி, குன்னூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுனிதா நேரு, வட்டாச்சியர் தினேஷ்குமார், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் நாகேஸ்வரி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஜெயமோகனா, குன்னூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஜீனத் பேகம், குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், பேரட்டி ஊhttps://youtu.be/wwBEz9asXPg?t=5ராட்சி மன்ற தலைவர் ஜெகதீஷ், திமுக பொதுக்குழு உறுப்பினர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu