ஆன்லைனில் ஐ.நா.சபையில் பேச்சு: கோத்தகிரி மாணவரை பாராட்டிய கலெக்டர்

ஆன்லைனில் ஐ.நா.சபையில் பேச்சு: கோத்தகிரி மாணவரை பாராட்டிய கலெக்டர்
X

ஆன்லைனில் ஐ.நா. சபையில் பேசிய  மாணவர் ராகுலை பாராட்டிய நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா.

ஆன்லைன் மூலம் ஐ.நா.சபையில் உரையாற்றிய கோத்தகிரி மாணவரை, நீலகிரி கலெக்டர் பாராட்டினார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, கேர்கம்பை அரசு உயர்நிலைப் பள்ளியில், காக்காசோலை கிராமத்தை சேர்ந்த மாணவர் ராகுல் (வயது 13) 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அண்மையில், ஐ.நா. சபையில் ஆன்லைன் மூலம் உரை நிகழ்த்தும் வாய்ப்பு, மாணவர் ராகுலுக்கு கிடைத்தது.

தனது உரையில், சுற்றுச்சூழல் சார்ந்த குழந்தைகளின் உரிமைகள் குறித்து, ராகுல் எடுத்துரைத்தார். மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும், ஆங்கிலத்தில் பேசினார். ஐ.நா. சபையில் பேசி, நீலகிரிக்கு பெருமை தேடித்தந்த மாணவர் ராகுலை, குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் சுவாமி முத்தழகன், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.

இதை தொடர்ந்து, தற்போது நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை, இன்று சந்தித்து மாணவர் ராகுல் வாழ்த்து பெற்றார். அவரை கலெக்டர் பாராட்டி ஊக்குவித்தார். இந்த நிகழ்வின் போது ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai healthcare technology