குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் உதிரி பாகங்கள் வெட்டி எடுப்பு

குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் உதிரி பாகங்கள் வெட்டி எடுப்பு
X

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் உதிரி பாகங்கள் சேகரிக்கப்பட்டு எடுத்து செல்லப்படும் காட்சி 

குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் உதிரி பாகங்கள் சேகரிக்கப்பட்டு சூலூர் விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது

கடந்த 8-ம் தேதி குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் வனப்பகுதியில், ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து ஏற்பட்ட சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட பாகங்களை எடுத்து செல்லும் பணியில் விமானபடை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 8-ம் தேதி குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு வந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 14 ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விசாரணை அதிகாரியாக ஏர் மார்ஷல் மன்வேந்திரா சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. இதனால் சம்பவ இடத்தில் ஏர் மார்ஷல் மன்வேந்தர் சிங் கடந்த 6 நாட்களாக ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் ஹெலிகாப்டரின் பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்காக எடுத்து வைக்கப்பட்டது. இந்நிலையில் 14 நாட்களுக்கு பின்னர் அனைத்து பாகங்களையும் தடயவியல் ஆய்விற்காக கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு இன்று முதல் எடுத்து செல்லும் பணியில் விமானபடை மற்றும் ராணுவத்தின் ஈடுபட்டுள்ளனர். மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த பணி நடைபெறும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நஞ்சப்பசத்திரம் பகுதி முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதால் வெளியாட்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

Next Story