கோத்தகிரியில் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகை : மக்கள் அச்சம்

கோத்தகிரியில் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகை :  மக்கள் அச்சம்
X

தேயிலை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நிலக்கரி புகை.

கோத்தகிரியில் நிலக்கரியால் வெளியேறும் புகையால் நோய் உபாதை ஏற்படுமென கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்ட கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு பகுதியில் தனியார் தேயிலை தொழிற்சாலை இயங்கி வருகிறது. தற்போது இந்த தேயிலை தொழிற்சாலையில் விறகுக்கு பதிலாக நிலக்கரியை பயன்படுத்தி வருகின்றனர்.

அப்பகுதியில் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள் போன்றவை உள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாக தெரிகிறது.


தொழிற்சாலைகளில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் நிலக்கரியை பயன்படுத்தக் கூடாது என சட்டம் உள்ளதால் இது குறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரியவருகிறது. அதனால் விரைவில் நாக்குபெட்டா விவசாயிகள் சங்கம் சார்பில் தேயிலை தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!