குன்னூரில் கிருஸ்துமஸ் கேக் தயாரிப்பு ஜோர்

குன்னூரில் கிருஸ்துமஸ் கேக் தயாரிப்பு ஜோர்
X

கிருஸ்துமஸ் கேக். 

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு பல்வேறு வண்ண கேக்குகள் தயாரிக்கும் பணிகளும் துவங்கியுள்ளன.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு குழந்தைகளை கவரும் விதமாக பல்வேறு வகையான உருவ பொம்மை கேக் தயாரிக்கும் பணி குன்னூரில் இரவும் பகலுமாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடபட உள்ளது.

இதனிடையே குன்னூரில் பெட்போர்ட் பகுதியில் கேக் உலகம் என்ற பெயரில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு பல்வேறு வண்ண கேக்குகள் தயாரிக்கும் பணிகளும் துவங்கியுள்ளன. இதில் பிளாக் பாரஸ்ட், சாக்லெட், பிளம் கேக், வெண்ணிலா, கிரீம் போன்ற கேக்குகள் பல்வேறு வண்ணங்களிலும், குழந்தைகளை கவரும் அழகிய வடிவங்களிலும் இரவும் பகலுமாக கேக் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ கேக் 450 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இதன் விலை 650 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இருந்த போதிலும் கிறிஸ்துவ மக்கள் ஏசு பிறப்பை கொண்டாட கடைகளில் இவற்றை வாங்குவதற்கு முன்பதிவும் செய்து வருகின்றனர். இதனால், கேக் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்